×

கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது பி.எஸ் பள்ளியிடம் இருக்கும் 46 கிரவுண்ட் நிலம் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 46 கிரவுண்டு நிலத்தை பி.எஸ் உயர்நிலைப்பள்ளியிடம் இருந்து மீட்க கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தினார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், கோயிலுக்கு அருகிலுள்ள குமரகுருநாதன் தெரு, பொன்னம்பல வாத்தியார் தெரு, கிழக்கு குளக்கரை தெரு, பிச்சுப்பிள்ளை தெரு ஆகிய நான்கு வீதிகளில் உள்ள சுமார் 22 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் நூலகத்தை பார்வையிட்டு விரைவில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் நூலகம், காலனி பாதுகாப்பு மையம், பொது கழிப்பிடம், கார் பார்கிங், இளைப்பாறும் கூடம் போன்ற நவீன வசதிகள் கூடிய பெருந்திட்டத்திற்கான வரைப்படம் ஒன்றினை விரைவில் உருவாக்கி செயல்படுத்த கோயில் இணை ஆணையர் மற்றும் செயல்அலுவலருக்கு அறிவுறுத்தினார். இக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 46 கிரவுண்ட்  நிலம் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு மேற்படி இடத்தினை விரைவில் திருக்கோயில் வசம் மீட்கவும் வாடகை வசூல் செய்திடவும்  அறிவுறுத்தினார். மேலும், ஏற்கனவே கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்ட 30 கிரவுண்ட் நிலத்தில் மாணவ, மாணவியர்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்….

The post கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது பி.எஸ் பள்ளியிடம் இருக்கும் 46 கிரவுண்ட் நிலம் மீட்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kapaleeswarar Temple ,PS School ,Minister ,Shekharbabu ,Chennai ,Mylapore Kapaleeswarar Temple ,BS High School ,
× RELATED மயிலாப்பூர் கோயில் கலாசார மையம் – அரசுக்கு உத்தரவு